புதுவை மாநிலம், வில்லியனூர் பகுதியில் ACMA ஆட்டோ கார்ஸ் அருகேயுள்ள அன்னை கண் மருத்துவமனை சார்பாக குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய்க்கான சிறப்பு இலவச கண் மருத்துவ முகாம் மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கேலக்ஸி உயர்நிலைப்பள்ளி, அப்பு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி என பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வில்லியனூர் 4 மாட வீதியை சுற்றி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை டாக்டர். மகேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் அன்னை கண் மருத்துவமனை டாக்டர். சுகந்தி பிரபாகர் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
" alt="" aria-hidden="true" />